Tuesday, December 28, 2010

சிந்தனை பெருகப் பெருக, எண்ணம் உயரும்!

எண்ணம் உயர உயர, பேச்சு சுருங்கும்!

பேச்சு சுருங்கச் சுருங்க, செயல் சிறக்கும்!

செயல் சிறக்கச் சிறக்க, புகழ் கூடும்!

புகழ் கூடக் கூட, பொருள் சேரும்!

பொருள் சேரச் சேர, மகிழ்வு நிறையும்!

மகிழ்வு நிறைய நிறைய, வாழ்வு மலரும்!

வாழ்வு மலர மலர, மமதை ஏறும்!

மமதை ஏற ஏற, பேச்சு விரியும்!

பேச்சு விரிய விரிய, செயல் சுருங்கும்!

செயல் சுருங்கச் சுருங்க, புகழ் குறையும்!

புகழ் குறையக் குறைய, செல்வம் கரையும்!

செல்வம் கரையக் கரைய, வாழ்வு இருளும்!

வாழ்வு இருள இருள, சிந்தனைப் பெருகும்!

மீண்டும் சிந்தனைப் பெருகப் பெருக,

2 comments:

  1. தோழரே,
    தாங்கள் இந்த வலை தளத்தை ஆரம்பித்த நோக்கம் என்ன என்று சற்று விளக்க முடியுமா???

    ReplyDelete