காயம்படாதவன் தான் தழும்பைக் கண்டு நகைப்பான்.
உடலிலும் மனதிலும் வலிமை இல்லாமல் போனால்
ஆன்மாவை அடைய முடியாது.
நீ உன்னைப் பலவீனன் என்று ஒரு போதும் சொல்லாதே.
எழுந்து நில். தைரியமாக இரு.
வலிமையாக இரு. பொறுப்பு முழுவதையும் உன் தோள்
மீதே சுமந்து கொள்.
வாழ்க்கையை இன்பம் அனுபவிக்கும் பூஞ்சோலையாக
நினைத்து உருகி நிற்கும் காதலனின்
மனநிலை நமக்குத் தேவையே இல்லை.
மாறாக வாழ்க்கை என்னும் போர்க்களத்தில் அஞ்சாமல்
எதிர்த்துநிற்கும் வீரன்
ஒருவனுடைய மனநிலையே நமக்கு இப்போது வேண்டும்.
கோழைகள் எப்போதும் வெற்றியடைய முடியாது.
சிவன், விஷ்ணு என்றெல்லாம் எத்தனையோ நூறு பெயர்களால்
அழைக்கப்படுவது
ஒரே கடவுள்தான். பெயர்கள் வேறு. ஆனால் இருப்பது ஒன்றுதான்.
அமைதியான மனமே உங்களின் மிக முக்கியமான மூலதனம்.
அதுவே எல்லா வெற்றிகளையும் கொண்டுவரும்.
துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.
உண்மைக்காக எதையும் தியாகம் செய்யலாம்.
ஆனால் எதற்காகவும் உண்மையைத் தியாகம் செய்யக்கூடாது.
————————————————————————————————————————-
விவேகானந்தர்
Have this kind of energy always
ReplyDelete