ஆன்ட்ராய்டு டேப்லெட் தயாரிக்கும் பிலிப்ஸ்!
இந்திய எலக்ட்ரானிக் சந்தையில் ராஜாவாக வலம் வரும் பிலிப்ஸ் ஒரு புதிய 7 இன்ச் டேப்லெட்டைக் களமிறக்க திட்டமிட்டிருக்கிறது. இந்த பிலிப்ஸ் டேப்லெட் ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் க்ரீம் சான்ட்விஜ் இயங்கு தளத்தில் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிலிபிசின் 7 இன்ச் டேப்லெட் எம்ஐபிஎஸ் அடிப்படையில் அமைந்த சிபியு ஆர்கிடெக்சர், பல்வகையான் மீடியா சப்போர்ட், 4 முதல் 5 மணி நேர இயங்கு நேரம் வழங்கும் பேட்டரி மற்றும் 7 இன்ச் டிஸ்ப்ளே போன்ற தொழில் நுட்பங்களைக் கொண்டிருக்கும் என்று நம்பப்படுகிறது.
இந்த பிலிப்ஸ் டேப்லெட் 1024×600 அல்லது 800×480 பிக்சல் ரிசலூசனைக் கொண்டிருக்கும். மேலும் எச்.264 மற்றும் டபுள்யுஎம்வி மீடியா பார்மட்டுகளை இந்த டேப்லெட் சப்போர்ட் செய்யும்.
இந்த டேப்லெட்டில் எம்ஐபிஎஸ் அடிப்படையில் அமைந்த சிபியு ஆர்க்கிடெக்சர் இருப்பதால் இதன் செய்திறன் அமர்க்களமாக இருக்கும்.
இந்த பிலிப்ஸ் டேப்லெட்டின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதுபோல் இதன் விற்பனைத் தேதியும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் இப்போதே இந்த டேப்லெட்டை வரவேற்க பிலிப்ஸ் ரசிகர்கள் தயாராகிவிட்டார்கள். மேலும் பல குறைந்தவிலை டேப்லெட்டுகளை அறிமுகப்படுத்தவும் பிலிப்ஸ் திட்டமிட்டிருக்கிறது.