உடல் ஆரோக்கியமாக இருக்க உணவு நன்கு உண்ண வேண்டும். ஆனால் அந்த உணவே அளவுக்கு அதிகமாக உண்டால் உடல் பெருத்துவிடும். சிலருக்கு வயிறு நிறைய சாப்பிட்டு 2-3 மணி நேரத்திலேயே மீண்டும் பசி எடுத்துவிடும். அப்படி பசி எடுக்கும் போதெல்லாம் சாப்பிட்டால் குண்டு தான் ஆக நேரிடும். அந்த பசியைக் கட்டுப்படுத்த ஒரு சில உணவுகள் உள்ளன. அந்த உணவுகள் பசியைக் அடக்குவதோடு, உணவுக் கட்டுப்பாட்டோடும் வைக்கிறது. அந்த உணவுகள் என்னென்னவென்று பார்ப்போமா!!!
ஆப்பிள் : ஆப்பிளானது உடலுக்கு ஆரோக்கியமானது மட்டுமல்லாமல், பசியையும் கட்டுப்படுத்துகிறது. ஏனென்றால் ஆப்பிளில் அதிகமாக இரும்புச்சத்து உள்ளது, இதனால் வயிறு நிறைவதோடு, நீண்ட நேரம் பசி எடுக்காமலும் இருக்கும். ஏனெனில் ஆப்பிளை சாப்பிடும் போது நீண்ட நேரம் மென்று திண்பதால், நம் வயிறு நிறைந்துவிடும். மேலும் இதை நாம் சாப்பிட்டால் நம் எடையும் குறையும்.
காய்கறிகள் : காய்கறிகள் உடலுக்கு மிகவும் சிறந்த அதிகமாக ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருள். அந்த காய்கறிகளில் கீரை வகைகள், முட்டைக் கோஸ், பசலைக் கீரை, கேரட் போன்றவற்றை அதிகம் உண்பதால் பசி குறைவதோடு, உடலானது நன்கு ஆரோக்கியமாகவும் இருக்கும். மேலும் காய்கறிகளை சூப் அல்லது ஜூஸ் செய்து குடித்தால் மிகவும் நல்லது.
வாழைப்பழம் : தினமும் இரண்டு வாழைப்பழம் சாப்பிட்டால் பசி எடுக்காமல் இருப்பதோடு, சுறுசுறுப்பாகவும் இருக்கும். இது ஒரு எனர்ஜி பூஸ்டர் பழம், ஆகவே பசி வந்தால் இரண்டு வாழைப்பழம் சாப்பிடுங்கள். ஏனென்றால் இதில் உள்ள இனிப்புப் பொருள் பசியைக் கட்டுப்படுத்தும். மேலும் ஒரு நாளைக்கு இரண்டு பழத்திற்கு மேல் சாப்பிட வேண்டாம்.
இறால் : இதில் கலோரி குறைவாக இருப்பதால், பசியை நன்கு கட்டுப்படுத்தும். மேலும் இது உடல் எடையை குறைக்க நினைப்போருக்கு மிகச்சிறந்த உணவு. இந்த இறாலை வேக வைத்து, சாஸ் அல்லது சீஸோடு சாப்பிடலாம். இவ்வாறு சாப்பிட்டால் சுவையாக இருப்பதோடு, எடையையும் குறைக்கிறது.
நட்ஸ் : நட்ஸில் ஒன்றான அல்மண்ட்ஸ் மற்றும் பைனில் அதிகமாக புரோட்டின் மற்றும் இரும்புச்சத்து இருக்கிறது. இது உடலில் உள்ள பசியைத் தூண்டும் ஹார்மோனின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. மேலும் இது ஒரு சிறந்த ஈவினிங் ஸ்நாக்ஸ். இதை காய்கறிகளோடு சேர்த்தும் சாப்பிடலாம். இதிலும் கலோரி குறைவாக இருப்பதால் எடையை குறைக்கவும் உதவுகிறது.
No comments:
Post a Comment