பொங்கலோ பொங்கல் என்று கூவி அதை வெறும் இனிப்பு பண்டமாக உண்பது மட்டுமே இன்றைய நடைமுறையாக உள்ளது.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். அதன் பொருள், நெல் பயிரிட்ட காலத்தில் அது வளர்ந்து வரப்பு பாதையை மூடிவிடும்.
தை பிறக்கும் தருணத்தில் நெற்பயிர் முற்றி பாரம் தாங்காமல் சாய்ந்துவிடும். அதோடு பயிருக்கு நீர் பாய்ச்சுவதையும் நிறுத்தி விடுவார்கள்.
அறுவடை காலமான தை பிறக்கும் பொழுது நெற்பயிர் விழகி மற்றும் நீர் இல்லாமல் களைகள் வாடி வரப்பு பாதை தெளிவாக தெரியும்.
இதை தான் நம் முன்னோர்கள் 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்றார்கள்.
ஆனால் அது மட்டுமே அல்லாமல், தை பிறந்துதானே நெற்பயிரை நமக்கு ஈற்றிக் கொடுக்கிறது. அடுத்த தை வரும் வரை இந்த நெற்பயிர் தான் நமக்கு நம் வாழ்வை வழி காட்டும் வாழ்வாதாரமாக உள்ளது. இதையும் கருத்தில் கொண்டு தான் நம் முன்னோர்கள் 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்றார்கள்.
அதனால் தான் நம் முன்னோர்கள் தை முதல் நாளை தமிழர்களின் புத்தாண்டாக கொண்டாடி தமிழுக்கு பெருமை சேர்த்தார்கள்.
தாய்க்கு பெருமை சேர்ப்பது தானே மகனுக்கும் பெருமை. தமிழின் அருமை தெரிந்தவர்கள் நம் முன்னோர்கள்.
இன்று நாம் ஆங்கில அப்பன்களுக்கு ரகசியமாய் பிறந்ததை போல் அவர்களின் புத்தாண்டை நாம் 'பீர்' குடித்தும் வெடி வெடித்தும் கொண்டாடுவோம்.
பொங்கலன்று உண்டது செரிக்க தொலைகாட்சி சிரிப்பு பட்டிமன்றத்தை பார்த்து தமிழ் அறிவை வளர்ப்போம்.
தமிழரின் கலாட்சாரத்தை பெருமை பேசும் வெற்றி திரு மகனாய் உலா வரும் நம் இளைஞர்கள் இந்த திருநாளின்போது 'ஹாப்பி பொங்கல்' கூறி தமிழுக்கு பெருமை சேர்ப்பார்கள்.
தன் முறத்தால் புலியை விரட்டிய தாயின் வழி வந்த யுவதிகள் குறுஞ்செய்தியால் தமிழை சிலிர்க்க வைப்பார்கள்.
ஆதலால் தமிழை இப்படியும் வளர்ப்போம்.
இனிய தமிழர் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment